இடி மின்னலுடன் பெய்த கோடை மழை
ஆண்டிபட்டி: மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் தாக்கம் அதிகரித்து மதியம் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். இந்நிலையில் நேற்று மாலை தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. வெட்கை தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மின்தடை தேனியில் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் மின் ஒயர்கள் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. மாலை 6:30 முதல் இரவு 8:30 மணிவரை மின்தடை நீடித்தது. மின்வாரியத்தினர் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரித்த வெயிலால் வெப்பம் அதிகமானது. மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேவைக்கு திண்டாடின. இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு பலத்த காற்று, இடி மின்னலுடன் துவங்கிய கோடை மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
ஓடைகளில் நீர்வரத்து இல்லை. கடந்த சில வாரங்களுக்கு பின் பெய்த மழையால் ஆண்டிபட்டி பகுதியின் வெப்பம் உடனடியாக தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
கோடை மழையால் குளிர்ந்த காற்று பெரியகுளம்: இப் பகுதியில் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை மிஞ்சும் அளவிற்கு வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இரவில் நிம்மதியான தூக்கம் தொலைந்தது. மாதத்தின் கடைசி நாளான நேற்று மாலை 5:15 மணிக்கு சாரலாக வந்த கோடை மழை அரை மணி நேரம் கனமழையாக மாறியது. இதனால் வெயிலால் ஏற்பட்ட வெப்பக்காற்று தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு