மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் உள்ள மகா கணபதி, மாரியம்மன், ராமர், ஏனைய பரிவார தெய்வங்-களின் ஆலய நுாதன அஷ்ட பந்தன கும்பாபி-ஷேக விழா நேற்று நடந்தது. கடந்த ஏப்., 27-ல் மங்கல இசை, கணபதி வழிபாடுடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோபுர கலசத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். என்.மோட்டூர் கிராம மக்கள் சார்பாக அன்ன-தானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குறைபாடுகளை தி.மு.க., அரசு சரிசெய்ய தவறி விட்டது; மா.கம்யூ., பாலகிருஷ்ணனுக்கு திடீர் ஞானோதயம்
-
ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை: திருமா கண்டுபிடிப்பு
-
மேற்குவங்கத்தில் மறு ஓட்டுப்பதிவு முதல் சென்னை vs மும்பை பலப்பரீட்சை வரை; இன்று ( மே 2) முக்கிய நிகழ்வுகள்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு; வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்வு
-
கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா; 2 நாட்களுக்கு கட்டணம் இல்லை
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
Advertisement
Advertisement