குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அருகே நடக்கவிருந்த, குழந்தை திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.


இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் வெளி-யிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக குழந்தைகள் உதவி மைய, 1098க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குருப-ரப்பள்ளி போலீசார், கங்கோஜி கொத்துார் வி.ஏ.ஓ., மற்றும் குழந்தைகள் உதவி மைய வழக்கு பணி-யாளர் ஆகியோர் கொண்ட குழு, கடந்த, 29ல், நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தைகளுக்கு இளம் வயது திருமண ஏற்பாடு செய்தல் அல்லது நடத்தி வைத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடு-படும் நபர்கள் மீது, குழந்தை திருமண தடைச் சட்-டத்தில், 2 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement