கோடைக்கால பயிற்சி முகாம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கல்

கிருஷ்ணகிரி; கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்றவர்-களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.


கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவ, மாணவியருக்கு, 2026ம் ஆண்-டிற்கான மாவட்ட அளவிலான, 15 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த மாதம், 17ல் துவங்கி நேற்று வரை நடந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்த பயிற்சியில், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.பயிற்சி முகாமில், தடக ளம், கைப்பந்து, டேக்-வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, கூடைப்-பந்து, சிலம்பம், ஹாக்கி மற்றும் மல்லர்கம்பம் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளித்தனர். நிறைவு நாளான நேற்று, பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) நடராஜ முருகன் சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது-மக்கள் பங்கேற்றனர்.

Advertisement