ஆகாய தாமரையால் பாழாகி வரும் ராமநா-யக்கன் ஏரி
ஓசூர்; ஓசூர், ராமநாயக்கன் ஏரி கரைகள் பலப்படுத்தப்-பட்டு நடைபாதை அமைத்து அழகுப்படுத்தப்பட்-டுள்ளது. ஆனால், ஏரிக்குள் ஆகாய தாமரை நிறைந்து பாழாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரின் மையப்ப-குதியில் ராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கிழக்கு புற கரைகளை பலப்படுத்தி, கழி-வுநீர் ஏரிக்கு வராமல் தடுத்து, மழைநீர் மட்டும் வருவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்-ளப்பட்டன. ஆனால் குளியலறை, கழிவறை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், ராட்சத குழாய்கள் மூலம் ராமநாயக்கன் ஏரிக்குள் விடப்-பட்டுள்ளது.
ஏரிக்கரையில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் வாக்கிங் செல்வோர் பயன்படுத்துகின்றனர். பூங்-கவை சிறுவர், சிறுமியர் உபயோகப்படுத்துகின்-றனர். ராமநாயக்கன் ஏரியை சுத்தம் செய்து, படகு இல்லம் அமைக்கவும், ஏரிக்குள், 5 இடங்களில் ஐ லேண்ட் அமைக்கும் பணிகளும் பாதியில் நிற்-கின்றன.படகு சவாரி செய்யும் மக்கள், ஐ லேண்டிற்கு சென்று ஓய்வெடுக்க இருக்கை, கடைகள் போன்-றவை அமைக்கப்படும் என, மாநகராட்சி நிர்-வாகம் தெரிவித்தது. இதற்காக, மாடல் சிட்டி திட்-டத்தில், உலக வங்கி நிதியுதவியுடன், 23.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், படகு இல்லம் மற்றும் ஐலேண்ட் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. ஓசூர் நகர மக்களுக்கு ராமநாயக்கன் ஏரியில் உள்ள பூங்-காக்கள் மற்றும் நடைபாதை மட்டுமே பொழுதை கழிக்க சிறந்த இடமாக உள்ளது. மேலும் ஏரி முழு-வதையும் ஆகாய தாமரை ஆக்கிரமித்து பாழாக்-கியுள்ளது. இதை அகற்ற மாநகராட்சி எந்த முயற்சியும் செய்யவில்லை.
மேலும்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
-
பணி நிறைவு பாராட்டு விழா