வெளிநாட்டில் இருப்பது பாதுகாப்பில்லை; தங்கத்தை இந்தியா கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி!
புதுடில்லி: வெளிநாட்டில் இருப்பு வைத்திருப்பது பாதுகாப்பில்லை என்பதால், தங்கத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சியை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம், இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து மத்திய வங்கிகளும், தங்கள் நாட்டு கரன்சிக்கு ஈடாக தங்கத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கியும் பெருமளவு தங்கத்தை சந்தையில் வாங்கி இருப்பு வைத்துள்ளது.
இவ்வாறு வாங்கப்பட்ட தங்கம் 880 மெட்ரிக் டன், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ளது. பிரிட்டனில் செயல்படும் பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியிலும் கணிசமான தங்கம் இருந்தது.
அந்நியச் செலாவணி
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களால், வெளிநாடுகளில் தங்கம், அந்நியச் செலாவணி போன்றவற்றை இருப்பு வைப்பது பாதுகாப்பற்றது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2023 உக்ரைன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவுக்கு சொந்தமான பெருமளவு அந்நியச் செலாவணி, வெளிநாட்டு வங்கிகளில் இருப்பில் இருந்தது. ஆனால், போருக்கு காரணமான ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக கூறி, ஜி7 நாடுகள் அந்த அந்நியச் செலாவணியை கைப்பற்றி விட்டன.
77 சதவீதம்
இதேபோல, தலிபான்கள் ஆப்கன் அரசை கைப்பற்றியபோதும், அந்நாட்டு அரசு கணக்கில் இருந்த அந்நியச் செலவாணி, அவர்களிடம் தரப்படவில்லை. இத்தகைய சிக்கல்களை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருப்பில் இருக்கும் தங்கத்தை இந்தியா கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
அதன்படி பிரிட்டன் வங்கியில் இருக்கும் தங்கத்தின் கணிசமான பகுதி, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த தங்க கையிருப்பில், இந்தியாவில் இருந்த தங்கத்தின் அளவு 2023 மார்ச் மாதம் 37 சதவீதமாக இருந்தது. இப்போது இந்த அளவீடு, 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
104 மெட்ரிக் டன்
கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம், இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் 197 மெட்ரிக் டன் தங்கம், பேங்க் ஆப் இங்கிலாந்து வசம் உள்ளது. அதையும் இந்தியா கொண்டு வரும் முயற்சிகளை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளும், மேற்கத்திய நாடுகளில் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தை, தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரை எழுதப்பட்டுள்ள 16 கருத்துக்களையும் படித்தேன். அந்தோ பரிதாபம். இந்திய/தமிழர்களின் தங்க கையிருப்பு பற்றிய ஞானத்தை என்னென்று சொல்வேன் 1. 2009-க்கு பிறகு இந்தியா வெளிநாடுகளில் தங்கத்தை புதிதாக சேர்க்கவில்லை. 2. 2023-க்கு பின்தான் வெளிநாடுகளில் இருக்கும் தங்கத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரும் பணிகள் ஆரம்பமாயின. 3. இப்போது இந்தியாவின் கையிருப்பில் 77% தங்கம், இந்தியாவுக்குள்தான் உள்ளது. வெளிநாடுகளில் வைத்திருக்கும் தங்கத்திற்கு "வட்டி" கிடையாது, இடமாற்ற / கைமாற்ற சேவைகளுக்கு ஒரு gold bar -க்கு $1.75 இந்தியா கொடுக்க வேண்டும். 4. இவ்வாறு இருந்தும் இந்தியா என் 50 ஆண்டுகளுக்கு மேல் தங்கத்தை UK, US- இல் வைத்திருந்தது என்பதை பாமரர்களுக்கு விளக்க, தினமலர் ஒரு தனி கட்டுரையே எழுத வேண்டும். அதை நான் இங்கு எழுதினால் எனக்கு கை வலிக்கும். LOL
இந்த மகனுக்கு எவளோ அறிவு....
இனி இந்தியாவின் தங்கம் மோடி
மத்திய பாஜக அரசு தங்கத்தை இங்கு கொண்டு வந்து அதானிக்கும் அம்பானிக்கும் சல்லிசான விலையில் விற்கும் திட்டம் உள்ளது போல் தோன்றுகிறது!
வீணா போன வேணு ..இல்லையென்றால் திராவிடம் ஆட்டைய போட்டுவிடும்...
காங்கிரஸ் ஆட்சியில் முட்டாள்தனமாக வட்டிக்கு ஆசைப்பட்டு நமது தங்கத்தை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கொடுத்து வைத்திருந்தார்கள். உக்ரைன் போரில், பைடன் ரஸ்சியாவிற்கு அடித்த ஆப்பில், உலகம் விழித்து கொண்டது. பிரான்ஸ் அதன் அமெரிக்கா தங்கத்தை அங்கேயே விற்றுவிட்டு, பிரான்சில் தங்கம் வாங்கி கொண்டது. இந்தியா பிரிட்டனிலிருந்து தங்கத்தை இந்திய கொண்டுவந்துவிட்டது. இன்னும் முப்பது சதவீதம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ளது. அதையும் எடுத்து வரவேண்டி உள்ளது. இந்தியாவிற்கு தங்கத்தை கொடுக்காமல் அமெரிக்கா முரண்டு பிடிக்கிறது. இப்படியே செய்தால், பிரான்சின் வழியை இந்தியா பின்பற்ற வேண்டி இருக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பலுஜிஸ்தான் சிந்து மாகாணம் லாகூர் நகரம் நாம் திரும்ப மீட்கும் முன் வெளிநாடுகளில் உள்ள நமது தங்கம் மற்றும் மற்ற மூலதனத்தை திரும்ப கொண்டு வரவேண்டும். அதேபோல் இங்குள்ள குப்பைகளை வெளியேற்ற வேண்டும். நம் மாணவர்களுக்கு 1500 வருட நமது போராட்ட உண்மை வரலாற்றை மறைக்காமல் சொல்லி தரவேண்டும்.
இது ராகுலுக்கு தெரியுமா?
Trust deficiency Trumps effect
தப்பித்தவறி கூட சேமிக்கலாம் ன்னு திட்டம் வேணாம். இங்க எறும்பு கரையான் எலித் தொல்லை ஆபத்து அதிகம்.
after bring Gold into India/Tamilnadu, எம்பா இங்க ஒரு 50 மெட்ரிக் டன் கோல்ட் இருந்ததே தெரியுமா, திமுக be like அதெல்லாம் gold biscuit நினைச்சு எறும்பு தின்னுடுச்சு!!!
குஜராத் மாநிலத்தவர்கள், பெரும் கில்லாடிகள், எட்கேனவே இரண்டுபேர் நாட்டை விட்டு ஓடிட்டாங்க.
செந்தூரு .... நீதிபதி சர்க்காரியா விசாரிக்கும்போதே அசந்து போனாராம் ....
கொஞ்சம் பெரு திருச்செந்தூரில் சுத்திக்கிட்டு இருக்காங்க
70 வருட ஆட்சியில் இத்தாலிக்காரன் எல்லா இடத்திலும் ஆங்கிலேயனிடம் நம்மை அடகு வைத்து விட்டான். தங்கம் உட்பட.. அதுலே எவ்வளவு கமிஷனோ?மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்