மே தினத்தில் இயங்கிய 105 நிறுவனம் மீது நடவடிக்கை * தொழிலாளர் துறை நடவடிக்கை
திருப்பூர்: மே தினத்தில், தொழிலாளருக்கு விடுமுறை அளிக்காத, 105 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிலாளர் துறை அதிகாரிகள், மே தின விடுமுறை தொடர்பாக, கடைகள், நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் என, மாவட்டம் முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொழிலாளருக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த ஆய்வில், 43 கடை மற்றும் நிறுவனங்கள், 75 ஒட்டல்கள் மற்றும் மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்மூலமாக, 75 ஓட்டல்களில், 71 முரண்பாடுகளும்; 43 கடைகளில், 33 முரண்பாடுகளும் இருந்துள்ளது. முரண்பாடு இருந்த, நிறுவனம் மற்றும் ஒட்டல் என, 105 உரிமையாளர்கள் மீது, தொழிலாளர் துறை நடவடிகக்கை எடுத்துள்ளது.
மே தினத்தன்று, உரிய அறிவிப்பு படிவம் வழங்கி, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாத நிறுவனங்களில் பணியாளருக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட்டதா, அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தொடர் ஆய்வுகள் நடக்குமென, தொழிலாளர்துறை உதவி கமிஷனர் காயத்ரி தெரிவித்துள்ளார்.