விஜய் கட்சிக்கு 41 சதவீதம் ஓட்டு : ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்
சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய கருத்துக்கணிப்பில் விஜயின் தவெக கட்சிக்கு 41 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், அவரது கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார். அதன் முடிவுகளை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது: 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முன்னாள் போலீசார் 10 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் 100 பேரை சந்தித்தனர். மொத்தம் 2.34 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த தகவல்களை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் வழக்கமான முறைப்படி ஆய்வு செய்யப்பட்டதில் 41 சதவீதம் பேர் தவெகவுக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர்.
திமுக, அதிமுகவுக்கு வழக்கமாக ஓட்டுப்போட்டவர்கள் பலர் விஜய் கட்சிக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். வீட்டில் உள்ள குழந்தைகள், மகன் , மகள் கூறியதால் அவர்கள் விஜய் கட்சிக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர்.கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக, தவெகவுக்கு சமபலத்தில் உள்ளன.
சென்னையில் தவெக செல்வாக்கு அதிகமாக உள்ளது. தெற்கு மண்டலத்தில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக தவெகவுக்கு 121 தொகுதிகள் கிடைக்கவாய்ப்பு உள்ளது. மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலவுகிறது.
மாற்றம் வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட்டதாக பலர் கூறியுள்ளனர். விஜய் மீதான ஈர்ப்பு காரணமாகவும் பெண்கள் விஜய்க்கு அதிகம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.கொங்கு மண்டலத்தில் இளைஞர்கள் பலர் நாதகவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.
2.27 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. 1.5 கோடி குடும்பங்களில் ஒருவர் தவெகவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர்.முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி வரை இருக்கலாம். அவர்களில் நிறைய பேர் விஜய்க்கு ஓட்டுப் போட்டு உள்ளனர். கிறிஸ்தவ இளைஞர்கள், மீனவர்கள் தவெகவுக்கு ஓட்டுப் போட்டு உள்ளனர். இவ்வாறு அந்த வீடியோவில் ரவி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க :
https://www.facebook.com/reel/955200924071542
@facebook@https://www.facebook.com/reel/955200924071542facebook
சரி
23ஆம் தேதி எடுத்த சர்வேயை 29 அன்று கூட வெளியிடாமல் மூன்று நாட்கள் கழித்து வெளியிடுவதன் காரணம்? மற்றவர் கணிப்புகளை எல்லாம் கலந்து இவரே ஒன்றை தயார் செய்ததாக விளம்பரம் செய்கிறார்.
சும்மா அவரவர் விருப்பப்படி அடிச்சு விட்ராங்க. இன்னும் ஒரு நாள்தான இருக்கு, பார்க்கலாம்.
கடந்த தேர்தல் வரை தனித்து எந்த திராவிடக் கட்சிக்கும் கூட இந்த வாக்கு சதவீதம் கிடைக்கவில்லையே ????
2016ல் ஜெயலலிதாவுக்கு இதற்கும் மேலேயே கிடைத்தது.
இப்படி ஒரு ரிப்போர்ட் கொடுக்க ஜோசப் விஜய்யிடம் எத்தனை லட்சம் ரூபாய்கள் பெறப்பட்டன?
நீங்கள் இதே போல ஒரு அறிக்கையை ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்துஇருந்தால் எவ்வளோ வாங்கி இருப்பீர்கள் ......
Please understand the following
1-He is trying to increase his youtube followers by using this matter. That is the main objective
2-No retired officer can command followers in 234 constituencies.
3- During service he was considered as dmk supporter
4-He is basically against bjp and rss. In 2006 he has arrested one hindu oversea priest which has become controversy.
5-During amma and aiadmk rule he was not given important assignments.
Now you can conclude his analysis
இவரை கேள்வி கேட்க வேண்டும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன்.சும்மா அடித்து விட வேண்டியது
2340 ரிட்டயர்ட் காவலர்களிடம் வேலை வாங்கும்
அளவிற்கு இந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி செல்வாக்குப் பெற்றவரா என்ன?
இவர் தொழிலுக்கு புதுசு போல் தெரிகிறது. நான்கு முனைப் போட்டியில் நாற்பத்தி ஒன்று சதவீத ஓட்டுக்கள் பெறும்
கட்சி 121 தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாமல் ஒரு கருத்துக் கணிப்பா?
ஒருவர் இருநூறு வெல்வோம் என்று புலம்பியதும் அடிப்படை அறிவு இல்லாததே காரணம்
பணமும், புத்தியும் கொடுக்காமல் தானே வந்த மாற்றத்தை விரும்பும் கூட்டம் - அதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக திராவிட வெறுப்பில் தமிழன் மொத்தமாக ரோல்ஸ் ராய்ஸில் பவணி வரும் ஜோசப்விஜைக்கு மாற்றி ஓட்டுப்போடுவான் என்பது அதீத கற்பனை.மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்