குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் பயிற்சி
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், நீர் தரப் பயிற்சி கூட்டம் நடக்கிறது. நாளை காலை 7:00 முதல் 10:00 மணி வரை, வெள்ளலார் குளம் பட்டாம்பூச்சி பூங்காவில் கூட்டம் நடக்கிறது.
நொய்யல் ஆற்றில் உள்ள செங்குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சிகுளம், வாலாங்குளம், வெள்ளலுார் குளம் ஆகிய எட்டு குளங்களை மையமாக கொண்டு இந்த பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நொய்யல் நதியில் மற்றும் குளங்களில் நீர் தரத்தை எப்படி ஆய்வு செய்வது மற்றும் ஆவணப்படுத்துதலை பற்றிய விரிவுரை வழங்கப்படுகிறது. ஆர்வம் உள்ள இயற்கை ஆர்வலர்கள், 80157 14790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குளங்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்
Advertisement
Advertisement