சிறையில் இருந்தபடி மனைவியுடன் வீடியோ காலில் பேசிய கைதி

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி ஒருவர், மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். மனைவி அந்த வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குற்ற வழக்கில் தொடர்பு உடைய அக்பர் என்பவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.

இவர் சிறையில் இருக்கும் போதே, தன் மனைவிக்கு வீடியோ கால் செய்து, நீண்ட நேரம் காதலுடன் பேசியுள்ளார்.

ஏப்ரல், 28ல், அக்பர் சிறையில் இருந்து விடுதலையானார். அப்போது சிறையில் இருந்து, கணவர் தன்னுடன் பேசிய வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதன்பிறகே வீடியோ பரவி, விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறையின் பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சிறையில் கைதியிடம் மொபைல் போன் எப்படி வந்தது. சிறைக்குள் ஜாமர் இருந்தும், நெட்ஒர்க் கிடைத்தது எப்படி, கைதிகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுத்தது யார் என, பொது மக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.

சிறை பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

Advertisement