கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு
சென்னை: தமிழகத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், 4,453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 25 மலைவாழ் சங்கங்கள் என, மொத்தம், 4,478 சங்கங்களை முழு கணினிமயமாக்கும் திட்டம், 180 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், 60 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள நிதியில், நபார்டு வங்கி 10 சதவீதம், எஞ்சிய நிதியை தமிழக அரசு வழங்குகின்றன. மத்திய அரசின் பங்கான, 108 கோடி ரூபாயில், ஏற்கனவே, 40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தற்போது, 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. கணினிமய திட்டத்தால், கூட்டுறவு சங்கங்கள் மென்பொருள் வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்படும். இதனால் சங்க செயல்பாட்டை அதிகாரிகள் துல்லியமாக கண்காணிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு
-
காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
-
நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
-
தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை
-
தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி
Advertisement
Advertisement