தனியார் பஸ் மோதி சிறுவன் பலி: ஜி.பி.ஏ.,வுக்கு எதிராக மக்கள் ஆவேசம்

ஹென்னுார்: சாலையை கடக்க முயன்ற போது, தனியார் பஸ் மோதியதில் சிறுவன் இறந்தான். ஜி.பி.ஏ.,வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி ஆவேசமாக பேசினர்.

பெங்களூரு ஹென்னுார் - பாகலுார் முக்கிய சாலையில், ஜி.பி.ஏ., சார்பில் ஒயிட் டாப்பிங் பணி நடக்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.

நேற்று மாலை ஒயிட் டாப்பிங் பணி நடக்கும் இடத்தில் வேகமாக வந்த தனியார் பஸ், சாலையை கடக்க முயன்ற வருண், 15 என்ற சிறுவன் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட வருண் பரிதாபமாக இறந்தான்.

ஆத்திரம் அடைந்த வருணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஜி.பி.ஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

ஓராண்டாக மந்த கதியில் நடக்கும், ஒயிட் டாப்பிங் பணியால் தான் விபத்து நடப்பதாக குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினர். அங்கு வந்த போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.

Advertisement