வேப்பிலை மாரியம்மனுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்
விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பம் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு விமான அலகு அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்ரா பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் பெரியகண்டியங்குப்பம் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 58ம் ஆண்டு திருவிழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, விமான அலகு அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
இதேபோல், கடலுார் ரோடு மாரியம்மன் கோவிலுக்கு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
Advertisement
Advertisement