சிதம்பரத்தில் சகஜானந்தா குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம், ஓமக்குளம் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள, சுவாமி சகஜானந்தா சமாதி கோவிலில், நேற்று 67 ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.

நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்னம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி எம்.பி., ராபர்ட் புரூஸ், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் அருள்பெத்தையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து எம்.பி., ராபர்ட் புரூஸ் கூறுகையில், ' சுவாமி சகஜானந்தா கல்வி, சமூக சேவையை பாராட்டும் வகையில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து ஜனவரி 30 ம் தேதி அவரது பிறந்த நாளை அரசு விழா எடுத்து கவுரவித்து வருகிறது.

பார்லி.,யில், அவருக்கு பத்மா பூஷன் விருது வழங்க வலியுறுத்தி பேசுவேன்,' என்றார்.

நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக்கழக செயலாளர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் வினோபா, பாலையா, இளையஅன்பழகன், பேராசிரியர் தெய்வநாயகம், பன்னீர்செல்வம், திலகவதி, தங்க பாஸ்கர் மற்றும் நெடுஞ்செழியன், மனோகரன், துரைமணி, ராஜன், சரஸ்வதி பேராசிரியர் ஆறுமுகம், கற்பனைசெல்வம், மணிவேல், ஆசிரியர் பாலசுப்பிரமணியன், மணிமொழி, துரை பாலசந்தர், சவுந்திர பாண்டியன், கஜேந்திரன், ரவி, தமிழரசன் உள்ளிட்ட நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற னர்.

Advertisement