உத்தமலிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் சிவனடியார்கள் பரவசம்
பெருமாநல்லுர்:உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
பெருமாநல்லுாரில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, 25ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் உத்தமலிங்கேஸ்வரர் கோவர்த்தனாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். தேரோட்டத்தில், சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் சிவகண பூதவாத்தியம் இசைத்தனர். திருவிழாவில், இன்று இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் புறப்பாடு, நாளை நடராஜர் தரிசன காட்சியும், 4ம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடகக்கிறது. தேரோட்டம் மற்றும் தேர்த்திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.