44 நிறுவனங்கள்மீது நடவடிக்கை


தேனி:தேசிய பண்டிகை விடுமுறை தினத்தன்று தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் துறை துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என 65 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 44 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement