முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னிமலை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், புலிவலம் அடுத்த தெக்காட்டூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் இந்துகுமார், 37;, தற்போது சென்னிமலை மேலப்பாளையம் பெருமாள் கோயில் வீதியில், இந்துகுமார் வசித்து வருகிறார்.

மேலப்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜபிரகாஷ், 40; முன்னாள் ராணுவ வீரர். குடும்பத்துடன் கோவை மாவட்டம் சூலுாரில் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னிமலை வந்துள்ளார். இந்துகுமார் வீடு எதிரில் காரை நிறுத்தியுள்ளார். காரை நிறுத்தக்கூடாது என்று தகராறு செய்து ராஜபிரகாஷை தாக்கியுள்ளார். பின்னர் காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி சென்னிமலை போலீசார் இந்துகுமாரை கைது செய்தனர்.

Advertisement