ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை

5

வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது; அப்படி இருந்திருந்தால் மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவும் தகர்க்கப்பட்டிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: நமது பங்குச்சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, தற்போது மிக உயர்ந்த நிலையில் உள்ளது. எண்ணெய் விலைகள் மிகக் குறைவாக இருந்தன. ஈரான் என்று அழைக்கப்படும் அந்த அழகான நாட்டிற்கு ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டும்; அவர்களிடம் அணு ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது; மத்திய கிழக்கை மட்டுமல்ல, ஐரோப்பாவும் தகர்க்கப்பட்டிருக்கும். மத்திய கிழக்கை மட்டுமல்ல, ஐரோப்பாவையும் காப்பாற்றுவதற்காகவே அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இல்லையெனில், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகச் சிதறியிருக்கும். ஈரானிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் இப்போது இல்லை.


ஈரானின் தலைவர்கள் மிகவும் கொடூரமான மனிதர்களாக இருந்தார்கள். 42,000 போராட்டக்காரர்களை அவர்கள் கொன்று குவித்தனர். ஈரானின் கையில் நீங்கள் அணு ஆயுதத்தை ஒப்படைத்துவிட முடியாது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் விரும்பியபடி முன்னேற்றம் ஏற்படவில்லை. ஈரானுக்கு எஞ்சியிருப்பது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அது பேச்சுவார்த்தையின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்; இல்லையென்றால் மோதல் தீவிரம் அடையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

Advertisement