அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
இன்றைய சூழலில் புதிதாக சொத்து வாங்க நினைக்கும் மக்கள், யாரிடம் வாங்குவது என்பதில் பல்வேறு குழப்பங்களை சந்திக்கின்றனர். இதில், பொதுவாக தனி நபர்களிடம் இருந்து தான் சொத்து வாங்குவோம், அதில் என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது என்ற எண்ணம் உள்ளது.
இதில் நிறுவனங்கள், அறக்கட்டளை போன்ற அமைப்புகளிடம் இருந்தும் தனி நபரகள் சொத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. தனி நபர்களிடம் இருந்து வாங்குவதை காட்டிலும், நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது ஆவணங்கள் தெளிவாக இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
உண்மையில் தனி நபர்களை காட்டிலும், அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தனி நபர்களிடம் இருந்து சொத்து வாங்குவதைவிட, அறக்கட்டளை சொத்து வாங்கும் போது கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பொதுவாக, தனி நபர் உரிமையாளர் என்றால் அதில் வில்லங்கம் பார்ப்பது எளிதாக முடிந்துவிடும். ஆனால், அறக்கட்டளையிடம் சொத்து வாங்கும் போது, அது யார் பெயரில் தற்போது உள்ளது, இதற்கு முன் எப்படி வாங்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.
சில சமயங்களில் தனி நபர்கள் பெயரில் உள்ள சொத்து, அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அத்தகைய சொத்துகளை பரிமாற்றம் செய்யும் நிலையில், அதற்கான அதிகாரம் பெற்ற நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது, அதை விற்பதற்கான தீர்மானம் என்ன என்பதற்கான ஆதாரத்தை பெற வேண்டும். அதன் பின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருக்கு அதிகாரம் உள்ளது என்று பார்க்க வேண்டும்.
இது போன்ற சொத்துக்கள் விஷயத்தில் வில்லங்கம் தொடர்பான ஆய்வுகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் அறக்கட்டளைகள் வழிபாட்டு அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் போது சொத்து வாங்குவோருக்கு கூடுதல் பிரச்னை ஏற்படும்.
அறக்கட்டளைக்கு சொத்தை தானமாக கொடுத்தவர் ஏதாவது நிபந்தனைகள் விதித்துள்ளாரா என்பது போன்ற விபரங்களை விசாரிப்பது அவசியம். குறிப்பிட்ட சில பணிகளுக்காக மட்டும் என்ற நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட சொத்துக்களை வாங்கும் போது அதன் உண்மை நிலவரத்தை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
வழக்கத்தைவிட கூடுதல் நேரம் செலவிட்டு இது போன்ற விஷயங்களை விசாரித்து செயல்பட்டால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
அறக்கட்டளைக்கு சொத்தை தானமாக கொடுத்தவர் ஏதாவது நிபந்தனை விதித்துள்ளாரா என்பது போன்ற விபரங்களை விசாரிப்பது அவசியம்.
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது