சோர்வடைந்த அ.தி.மு.க., வேட்பாளர்கள்; ஊக்கப்படுத்திய பழனிசாமி
- நமது நிருபர் -
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால் சோர்வடைந்துள்ள அ.தி.மு.க., வேட்பாளர்களை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, போனில் அழைத்து பேசி உற்சாகப்படுத்தி உள்ளார்.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தியால், சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் ஓட்டுப்பதிவானது எனவும், அதனால் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும் எனவும் அக்கட்சியினர் நம்பினர். ஆனால், ஓட்டுப்பதிவு முடிந்து சில நாள் கழித்து கணக்கிட்டு பார்த்ததில், வழக்கமாக அதிகரிக்கும் ஓட்டு சதவீதம் கூட, இந்த முறை அதிகரிக்கவில்லை என தெரிந்தது.
ஆனாலும், தி.மு.க., ஓட்டு வங்கியான பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஓட்டுகள் த.வெ.க., பக்கம் சென்றிருப்பதால், 'அ.தி.மு.க., வெற்றி பெறும்' என, கட்சி தலைமையில் இருந்து நம்பிக்கை ஊட்டினர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன.
சில கருத்து கணிப்புகளில், கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் மன உளைச்சலில் உள்ளனர். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கணிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதை அறிந்த பழனிசாமி, 'கருத்து கணிப்புகளை நம்பாதீர். இதுவரை நடந்த தேர்தல்களில், கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தான், அ.தி.மு.க., ஆட்சி அமைத்து உள்ளோம். கருத்து கணிப்பு என்ற பெயரில் மாய பிம்பத்தை உருவாக்கி, ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய தி.மு.க., முயற்சிக்கிறது' என, அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரையும் போனில் அழைத்து, 'நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்; தைரியமாக வேலையை பாருங்கள்' என பழனிசாமி ஊக்கம் கொடுத்து வருகிறார்.
தலைமையில் இருந்தே அழைப்பு வந்து, நம்பிக்கையான வார்த்தைகளை கூறுவதால், ஓட்டு எண்ணிக்கை பணிகளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (4)
Lakshminarasimhan - Chennai,இந்தியா
02 மே,2026 - 07:22 Report Abuse
பீலா உடுறவங்க இருக்கிறவரைக்கும் இப்படி உருட்டல்கள் உலா வரும் அதுவும் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
02 மே,2026 - 06:42 Report Abuse
இவர் துரோகிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே சரி .... கூட்டணி விஷயத்தில் 2024 எடுத்த முடிவு தவறாக இருக்கலாம் ... மே 10 க்குள் முதல்வராகப் பதவி ஏற்பார் .... 0
0
Reply
மோகனசுந்தரம் - ,
02 மே,2026 - 06:17 Report Abuse
இவர் மீது ஒருபோதும் நல்ல அபிப்பிராயம் எனக்கு ஏற்பட்டது இல்லை. இப்பொழுது எப்படி உருட்டுகிறார் பாருங்கள். 0
0
Barakat Ali - Medan,இந்தியா
02 மே,2026 - 06:40Report Abuse
தனி நபரின் அபிப்ராயம் ஜனநாயகத்தில் ஒரு பொருட்டே அல்ல ..... தனி நபர்கள் சேர்ந்த அமைப்பே சமூகம் ..... சமூகத்தில் அனைவரும் ஒருவர் குறித்து ஒருமித்த கருத்துக் கொள்வதில்லை .... 0
0
Reply
மேலும்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
-
பணி நிறைவு பாராட்டு விழா
Advertisement
Advertisement