திருச்செந்துார் புறப்பட்ட நகரத்தார் காவடி யாத்திரை

தேவகோட்டை:தேவகோட்டையில் இருந்து திருச்செந்துாருக்கு நகரத்தார் காவடிஏந்தி பாதயாத்திரையை துவக்கினர்.

தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் இருந்துநேற்று அதிகாலை காவடி ஏந்தி பாதயாத்திரையை நகரத்தார் துவக்கினர். மே 2 ம் தேதி நகரத்தார் காவடி நகர் முழுவதும் திருவீதி உலா வந்தது. கண்டனுார் அருளடியார் யாத்திரை செல்வோருக்கு ஆசி வழங்கினார்.

தேவகோட்டையில் புறப்பட்ட நகரத்தார் காவடி காளையார்கோவில், முதுகுளத்துார், துாத்துக்குடி வழியாக மே 10 ம் தேதி திருச்செந்துார் சென்று சேர்கிறது. காவடி, பால்குடம் எடுத்து சண்முகார்ச்னை, தங்க ரதம் பார்த்து செந்திலாண்டவரை வழிபட்டு திரும்ப உள்ளனர். மற்றொரு குழுவினரும் திருச்செந்துாருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

Advertisement