கூடைப்பந்து மைதானம் பயன்பாட்டிற்கு வருமா? 

நடுவீரப்பட்டு: அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட இட வசதிகள் இருந்தும், மைதானம் இல்லாமல் இருந்தது.

இதனால் மாணவர்களின் விளையாடும் ஆர்வம் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாத்திற்கு முன் விளையாட்டு திடலில், சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு, சுற்றிலும் வலையுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி துவங்கியது.

அங்கு கடந்த இரு மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement