பிரைவேட் ஈக்விட்டி முதலீடு ஏப்ரலில் 32 சதவீதம் சரிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் பெரிய நிறுவனங்களுக்கான 'பிரைவேட் ஈக்விட்டி' மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான 'வென்ச்சர் கேபிட்டல்' ஆகிய முதலீடுகளின் மதிப்பு 32 சதவீதம் குறைந்துள்ளது. 'வென்ச்சர் இன்டெலிஜென்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்ச்சர் கேபிட்டல் என்பது, துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியாகும்.

அதே நேரத்தில், பிரைவேட் ஈக்விட்டி என்பது ஓரளவு நிலைபெற்று, லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெரிய அளவிலான மூலதனமாகும்.

Tamil News

அறிக்கையின் முக்கிய விபரங்கள்
* 2025 ஏப்ரலில் கிட்டத்தட்ட 26,000 கோடி ரூபாயாக இருந்த முதலீட்டு மதிப்பு, நடப்பாண்டு ஏப்ரலில் கிட்டத்தட்ட 17,800 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

* ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் 124ல் இருந்து, 87ஆக குறைந்துள்ளது.

* கடந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் 1.37 லட்சம் கோடியாக இருந்த முதலீட்டு மதிப்பு, நடப்பாண்டில் கிட்டத்தட்ட 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

*ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் வெறும் 6 மட்டுமே கையெழுத்தாகியுள்ளன

Advertisement