டெக்னிக்கல் அனாலிசிஸ் நிப்டி 24,250 புள்ளிகளை கடக்க சிரமப்படலாம்
நிப்டி
நிப்டி 63 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிலையில், வர்த்தகத்தின் இடையே 286 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சற்று இறங்கி நாளின் இறுதியில் 121 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் உயர்வுடனே காணப்பட்டன. இவற்றில, 'நிப்டி100 குறியீடு' குறைந்தபட்சமாக 0.58 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250 குறியீடு' அதிகபட்சமாக 1.45 சதவீதமும் அதிகரித்து முடிந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும், 5 குறியீடுகள் இறக்கத்துடனும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 0.95 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி குறியீடு' அதிகபட்சமாக 2.41 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.




வர்த்தகம் நடந்த 3,430 நிறுவனங்களின் பங்குகளில் 2,136 ஏற்றத்துடனும் 1,185 இறக்கத்துடனும், 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் சோர்வடைந்த நிலையை காட்டுவதால் நிப்டி இறக்கத்தில் இருந்து மீள்கின்றதே தவிர ஏற்றத்திற்கான டிரெண்டில் பயணிக்கவில்லை என்றே கொள்ளவேண்டும். குறுகியகால சராசரிகளுக்கு மேலே முடிந்துள்ளது என்றாலும், 50 நாள் சராசரிக்கு அருகே (இ.எம்.ஏ.,) ஸ்ட்ராங்கானதொரு ரெசிஸ்டென்ஸை (கிட்டத்தட்ட 24,200-24,250 லெவல்களில்) நிப்டி எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே, டெக்னிக்கலாக பெரிய ஏற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகள் குறைவே. 24,250 லெவலுக்கு மேலே சென்றாலுமே 24,400 வரை மட்டுமே செல்வதற்கான வாய்ப்பு தற்போதைய சூழலில் இருக்கிறது. அதேநேரம், 24,000 என்ற லெவலுக்கு கீழே சென்றால் 23,800 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமேஸ்வரம் கோவிலில் தி.மு.க., ஆட்சியில் லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி மோசடி: போலீஸ் விசாரணை முடக்கம்
-
கள்ளழகர் கோயில் வசந்த உற்ஸவம்
-
கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
-
பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
-
புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Advertisement
Advertisement