'விசில்' சத்தத்தில் தகர்ந்த துரைமுருகன் கோட்டை
காட்பாடி: தி.மு.க., பொதுசெயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், 1996ல் இருந்து, 2026 வரை தொடர்ந்து, 30 ஆண்டுகளாக காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது படுதோல்வியை சந்தித்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
காட்பாடி மக்கள் கூறியதாவது:
காட்பாடி தொகுதியில், வன்னியர், பட்டியல் சமூக மக்கள் பரவலா க உள்ளனர்.
பட்டியல் சமூகத்தவரை தன் வீட் டிற்குள் அனுமதிக்காதவர் துரைமுருகன். தேர்தல் பிரசாரத்தின் போதும், வி.சி., மாவட்ட செயலர் பிலிப்பை, பிரசார வேனில் இருந்து இறங்க சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிலிப், பிற்படுத்தப்பட்ட வகு ப்பை சார்ந்தவர். இதனால் , பட்டியல் சமூக மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர். வன்னியர் சமூகத்தின் மதிப்புமிக்க இடத்தில் இருந்த துரைமுருகன், வன்னி யர் இடஒதுக்கீடு உள்ளிட்ட தான் சார்ந்த சமூக மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.
மேலும், அமைச்சர் ஆதரவாளர்களின் அட்ராசிட்டி, மகிமண்டலம் உள்ளிட்ட விவசாய கிராமங்களில், மக்களின் எதிர்ப்பை மீறி சிப்காட் தொழிற்சாலை அமைக்க முயன்றது ஆகியவை துரைமுருகனின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மகன், மருமகள் என, அவர் தன் குடும்பத்தினரை அரசியல் களத்திற்குள் புகுத்தியதை மக்கள் விரும்பவி ல்லை. பொ துமக்களின் குறைகளை கே ட்காதது, வெற்றி பெற்றால் சென்னையிலேயே முகாமிடுவது , கா ட்பாடி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, பல ஆண் டுகளாக பூட்டி வைத்தது ஆகிய வை துரைமுருகன் மீது, மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் தேர் தலில் தாராளமாக செலவிட்டும், துரைமுருகன் படுதோல்வியை தழுவி இருக்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இருந்தாலும் காட்பாடி மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருந்தால் விரைவில் நடைபெறும் இடைத்தேர்தலில் காசு பார்த்திருக்கலாம் ஹும்மேலும்
-
எந்த மாநிலத்திலும் கம்யூ., ஆட்சி இல்லை; 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்
-
தமிழக தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக; கவர்னருக்கு விஜய் கடிதம்
-
சொல்கிறார்கள்
-
சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் விஜய்
-
இதுவரை தோல்வியடைந்த முதல்வர்கள்!
-
என்னை தொட்டதற்கு வருத்தப்படுவீர்கள்: சொன்னதை செய்து காட்டிய விஜய்