இதுவரை தோல்வியடைந்த முதல்வர்கள்!

7

தமிழகத்தில் முதல்வராக இருந்து, அடுத்து வந்த தேர்தலில்களில் தோல்வியடைந்தவர்கள்:

காமராஜர்
: 1954 -- 1963 காலகட்டத்தில், தொடர்ந்து மூன்று முறை, காங்., கட்சி சார்பில் முதல்வராக இருந்த காமராஜர், 1967 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க,வின் சீனிவாசனிடம், 1,285 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பக்தவத்சலம்: 1963 - 1967ல் காங்., சார்பில் முதல்வராக இருந்த பக்தவச்சலம், 1967ல் ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், தி.மு.க.,வின் ராஜரத்தினத்திடம், 8,926 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஜானகி ராமச்சந்திரன்:
1988ல், 23 நாட்கள், அ.தி.மு.க., சார்பில் முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, 1989 தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில், தி.மு.க.,வின் ஆசியனிடம், 4,221 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதா: 1991 - 1996ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 1996 தேர்தலில் பர்கூரில் தி.மு.க.,வின் சுகவனத்திடம் 8,366 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஸ்டாலின்:
2 021 - 2026ல் முதல்வராக இருந்த ஸ்டாலின், 2026 தேர்தலில் கொளத்துாரில் த.வெ.க.,வின் வி.எஸ்.பாபுவிடம் 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 வாகை சூடிய 3 முதல்வர்கள்; தோல்வியடைந்த 2 முதல்வர்கள்

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், தான் மூன்று முறை போட்டியிட்டு வென்ற கொளத்துார் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரது கட்சியும் தேர்தலில் தோல்வி அடைந்தது. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கட்டாவில் உள்ள பவானிபூர் தொகுதியில், பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரியிடம், 15,114 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரது கட்சியும் தேர்தலில் படுதோல்வி அடைந்தது

புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்., தலைவருமான ரங்கசாமி, மங்கலம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ்.ரங்கனை, 7,050 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆட்சியையும் தக்கவைத்தார். தட்டாஞ்சாவடி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஜலுக்பாரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் பிதிஷா நியோக்கை, 89,434 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்

மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தன் சொந்த தொகுதியான தர்மடத்தில், காங்., வேட்பாளர் அப்துல் ரஷீத்தை, 19,247 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். எனினும், அவரது கட்சி காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

Advertisement