புகையிலைப் பொருட்கள் விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

மதுரை: மதுரை மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களை விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மே 11 முதல் 17 வரை ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 2106 கடைகளில் சோதனை நடந்தது. 11 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிந்தது. தனியாக மேற்கொண்ட ஆய்வில் 4 கடைகளிலும், போலீசாருடன் இணைந்த ஆய்வில் 4 கடைகளிலும், போலீசாரால் செல்லுார், தெற்குவாசல், அண்ணாநகரில் பதிவு செய்த 3 வழக்குகளிலும் விதிமீறல் உறுதி செய்யப்பட்டன.

விதிமீறிய 9 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. விதிமீறலில் முதன்முறையாக ஈடுபட்ட 7 கடைகளுக்கு ரூ.1.75 லட்சம், இரண்டாவது விதிமீறல் செய்த 4 கடைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வில் ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள 66.27 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Advertisement