கண்டனிப்பட்டியில் ஜல்லிக்கட்டு
சிவகங்கை:சிவகங்கை அருகே கண்டனிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
கொல்லங்குடி அருகே கண்டனிப்பட்டியில் தீப்பாய்ந்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்றன.
120 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களம் இறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் மாடுபிடிவீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதில் திருப்புவனம் பசியாபுரத்தை சேர்ந்த சுந்தருக்கு கழுத்தில் குத்து காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதேபோல் பார்வையாளர் குருந்தம்பட்டு திருப்பதியை 29 மாடு முட்டியதில் கால் முறிவு ஏற்பட்டு சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி