7 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு
சென்னை: 'தமிழகத்தில், தேனி, திண்டுக்கல் உட்பட ஏழு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மஹாராஷ்டிரா மாநிலம், விதர்பா முதல், தமிழகத்தின் குமரிக்கடல் வரை, வளி மண்டலத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, மாவட்டங்களில், சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன், கன மழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்று இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பம், 39 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்; மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
எந்த மாநிலத்திலும் கம்யூ., ஆட்சி இல்லை; 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்
-
தமிழக தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக; கவர்னருக்கு விஜய் கடிதம்
-
சொல்கிறார்கள்
-
சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் விஜய்
-
இதுவரை தோல்வியடைந்த முதல்வர்கள்!