அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 சவரன், ரூ.50,000 ‘ஆட்டை’ சோழவரத்தில் பரபரப்பு
சோழவரம்: சோழவரம் அருகே காற்று வசதிக்காக கதவை திறந்து வைத்திருந்த அரசு பள்ளி ஆசிரியை வீட்டில், 18 சவரன் நகை, 50,000 ரூபாய் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா, 47; அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், பத்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் காற்று வசதிக்காக, வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு துாங்க சென்றார்.
நேற்று காலை பார்த்தபோது, வீட்டின் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்த 18 சவரன் நகை, 50,000 ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார் விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அப்பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி