தி.மு.க., தோல்வியால் அதிர்ச்சி நிர்வாகி மாரடைப்பால் சாவு
சேத்தியாத்தோப்பு: தி.மு.க., தோல்வியடைந்ததால் அதிர்ச்சியில் சேத்தியாத்தோப்பை சேர்ந்த நிர்வாகி மாரடைப்பால் இறந்தார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த காத்தாழை முன்னாள் ஊராட்சி தலைவர் பழனியம்மாள் கணவர் பன்னீர்செல்வம், 56; தி.மு.க., நிர்வாகி. இவர், நேற்று முன்தினம் வீட்டில் தேர்தல் நிலவரம் குறித்து, டி.வி., பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க., தோல்வியால் அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது பன்னீர்செல்வம் இறந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement