கோவில் திருவிழா சமாதான கூட்டம்

திருக்கோவிலுார்: வடமலையனுார் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே சமாதான கூட்டம் நடந்தது.

இக்கோவிலில் விழா நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விழா நடத்தாமல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் 22ம் தேதி கொடியேற்றி, விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து நேற்று தாசில்தார் சரவணன் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். தீர்வு காண்பதில் இழுபறி நீடித்தது.

Advertisement