ஐந்தே நாளில் 26 மாடி கட்டடம்: வியப்பில் ஆழ்த்தியுள்ளது சீனா
பீஜிங்: சீனா, வெறும் 100 தொழிலாளர்களை வைத்து, ஐந்தே நாட்களில் 26 மாடி கட்டடத்தை கட்டி முடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், 26 மாடி கட்டடம் கட்ட வேண்டும் என்றால், குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், சீனாவில் உள்ள 'பிராட் குரூப் ஹோலன்' என்ற முன்னணி கட்டுமான நிறுவனம், தங்களின் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் சர்வதேச கட்டுமான பொறியாளர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
அதாவது 26 மாடிகள் கொண்ட கட்டடத்தை, 100 தொழிலாளர்களை கொண்டு, 120 மணி நேரத்தில் கட்டி முடித்து சாதனை படைத்து உள்ளது.
இந்த சாதனைக்கு சீனா பயன்படுத்தியிருப்பது 'பிரீ பேப்ரிகேட்டட்' எனப்படும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கட்டுமான முறை ஆகும். கட்டடத்திற்கு தேவையான சுவர்கள், துாண்கள், அறைகள் மற்றும் கழிப்பறை பகுதிகள் என அனைத்தையும் 'பி-கோர்' எனப்படும் பிரத்யேக 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பயன்படுத்தி தொழிற்சாலையிலேயே முன்பே தயாரித்து விடுகின்றனர்.
இந்த பிரமாண்ட பாகங்களை, அசுர வேக ராட்சத கிரேன்கள் மூலம் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, 'நட், போல்டு'களைக் கொண்டு மிக துல்லியமாக இணைத்து விடுகின்றனர். கான்கிரீட் பயன்படுத்தப்படாமல் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
'ஜிங்டு ஹோலன் பில்டிங்' என்று பெயரிடப்பட்ட இந்த கட்டடம், 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 208 குடியிருப்பு களுடன் உள்ளது. சத்தம் மற்றும் வெப்பம் உள்ளே வராதவாறு 4 அடுக்கு கண்ணாடி ஜன்னல்கள், சோபா, கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.
இதன் உறுதித்தன்மை குறித்து கேள்வி எழுந்தபோது, இது பாரம்பரிய சிமென்ட் கட்டடங்களை விட 10 மடங்கு எடை குறைவானது என்றும், மிக மோசமான நிலநடுக்கம் வந்தால் கூட தாங்கும் சக்தி உண்டு என்றும் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாம் ன்னும் அடுத்தவன் கண்டுபிடிப்பை பட்டாசுதலையில் வைத்து நடுரோட்டில் நின்னு டான்ஸ் ஆடி கொண்டு இருக்கிறோம்.
சீனா விடம் கற்று கொள்ள வேண்டிய விஷயம் தொழில் நுட்பம் நிறைய உள்ளது. இங்கு உள்ள ஆட்சியாளர்கள் அவர்களுக்கு வழி நடத்தி வரும் ஆணவத்தால் சீனாவை பார்க்க மறுக்கிறார்கள். 10 ஆண்டுகள் முன் பெய்ஜிங் நகரில் அதிக அளவு காற்று மாசு இருந்து வந்தது ஆனால் இன்று நிலையோ மாறி விட்டது.
"வேகமாக கட்டுவது சாதனை என்றால், அது பல தலைமுறைகளுக்கு உறுதியாக நிற்பதுதான் உண்மையான சாதனை. சீனப் பொருட்களின் தரம் உலகிற்கே தெரியும். அதே அவசர புத்திதான் இவர்களின் இந்த 5 நாள் கட்டிடத்திலும் தெரிகிறது. ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும், பாதுகாப்பு என்று வரும்போது இது ஒரு ஆபத்தான விளையாட்டு"
சீனாக்காரன் எப்போதும் வேகத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பான், தரத்திற்கு அல்ல Quantity over Quality. 100 தொழிலாளர்களை வைத்து 120 மணி நேரத்தில் அடுக்கப்பட்ட இந்த ஸ்டீல் ஸ்ட்ரக்சர் கட்டிடம், கடுமையான நிலநடுக்கம் அல்லது இயற்கை பேரிடர்களைத் தாங்குமா என்பது சந்தேகமே.
"5 நாட்களில் 26 மாடி கட்டிடம் கட்டுவது பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாக இருக்கலாம். ஆனால், சீனா தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் எப்படிச் சீக்கிரமாக டேமேஜ் Damage ஆகுமோ, அதே கதிதான் இந்த அவசரக் கட்டுமானங்களுக்கும் ஏற்படும். தொழிற்சாலையில் ரெடிமேடாகச் செய்து நட்-போல்ட் போட்டு முடுக்குவதால் வேகம் கிடைக்குமே தவிர, பாரம்பரிய சிமெண்ட் கட்டிடங்கள் போன்ற நீண்ட கால ஆயுளும், உழைப்பும் இந்த சீனா பீஸ் கட்டிடங்களுக்குக் கண்டிப்பாக இருக்காது"
ஒரேயடியாக அவர்களை குறை சொல்லாதீர்கள். கட்டுப்பாடு, சோம்பலில்லா செயல் வேகம், திறமை, தேவையான வேலைகளை சீக்கிரம் எளிதில் முடிக்கக்கூடிய கருவிகள், நாட்டுப்பற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான உடனுக்குடன் தண்டனை, சுத்தம் சுகாதாரம், இவை அனைத்தும் அவர்களை உலகத்திலேயே முன்னோக்கி செல்ல வைக்கின்றன.
சீனாகாரன் எப்பவும் கெட்டிக்காரன் தான்
சீனா பீஸ் செல் பொருட்கள் மாறி தா..மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி