கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற முடியும்: கனிமொழி நம்பிக்கை
துாத்துக்குடி: 'நம்மை நாம் பலப்படுத்திக் கொண்டல், கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியும். நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம்' என கனிமொழி தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் நாம் அடைந்த தோல்வி குறித்து ஆராய வேண்டும். துாத்துக்குடி தொகுதியில், தி.மு.க., தோல்வி அடைந்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அமைச்சராக இருந்த கீதா ஜீவன், மக்களோடு மக்களாக பணி செய்தவர். ஆனாலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கான கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிடம், உண்மை நிலவரங்களை நிர்வாகிகள் கூற வேண்டும்.
சரியான கருத்துகளை சொன்னால் தான், தலைமை முடிவெடுத்து, கட்சியின் கட்டமைப்பை மாற்ற முடியும். கூட்டணி கட்சிகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கூட்டணி இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும். நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
டெபாசிட் கிடைக்காது
இந்தம்மா ஒரு காமெடி பீசு . மதுவை ஒழிப்போம் என்று காமெடி பண்ணியது , இப்போது தனித்து நிற்போம் என்று காமெடி , உங்கப்பன் காலத்திலேயே தனியா நின்னா டப்பா டான்ஸ் ஆடிடும் என்றுதான் கூட்டணியோடே ஓடிக்கொண்டிருந்தார்.
நாம் யார் என்பதை இனிமே தான் நிரூபிக்க போறீங்களா ? இப்ப வோட்டு மூனா பிரியுது அதனால கூட்டணி இல்லாம வெற்றி பெறலாம்னு நினைக்குது தயவு செய்து முயற்சி பண்ணுங்க அப்பத்தான் நீங்க யாரு ன்னு தெரிஞ்சிடும்
கூட்டணி வைத்தே உங்க கம்பெனி முதலாளி அதாவது உங்க அண்ணன் ஸ்டாலின் அதுவும் முதலவர் அவர்களே தோற்று விட்டார்... இதில கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை உங்களுக்கு
திமுக தனித்து நின்றாலே -தானாகவே அழிந்து விடும்
தனித்து நின்ன வரலாறு உங்கள் சரித்திரத்தில் இல்லேயே கனி
அதுசரி உன்னோட அண்ணன் ஸ்டாலின் எப்பிடி தோல்வியடைந்தாருனு போயி கேளு
உங்கள் குருட்டாலி சீமான் தத்துவம்மா? சின்னம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள். என்னாட்சு பூரண மதுவிலக்கு???. கனி இனி கனியாதும்மா.
ஜாதிய காட்சிகளையும் மதவா த காட்சிகளையும் கூட்டணி வைத்ததன் மூலம் வளர்த்து விட்டதே டி எம் கே தான். எல்லா கட்சிகளும் தனித்து போட்டி இட்டு 20 சதவீதம் வாக்கு வாசிங்க வில்லன் என்றால் கலைக்கப் பட வேண்டும். அதிக காட்சிகள் இருப்பது நல்லதல்ல.
கனிமொழி பாவம் அதுக்கு புது நம்பிக்கை சொந்த தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க சென்ற கனிமொழியை கிராமத்திற்குள் மக்கள் அனுமதிக்கவில்லை இதுல வேற அசால்ட்டான நம்பிக்கை கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற முடியும் அப்பறம் மக்களே இல்லாமல் வெற்றி பெற முடியும் மண்டை கெலண்டு போய்விட்டாள் இப்படியெல்லாம் யோசிக்க தோணும் ..மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி