அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
நமது நிருபர்
ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, செங்கல்பட்டு- அரக்கோணம் ஒரு வழி ரயில் பாதையை 1538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதன் பிறகு பணிகளை துவக்க நிதி கேட்டு ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. 68 கி.மீ., தூரத்திற்கு இரட்டை வழி பாதை அமைக்கும் திட்டத்திற்கு, சென்னை புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் ஒப்புதல் அளித்து உள்ளதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்த இரட்டை ரயில்வே பாதை பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் 1 ரயில்கள் இயங்கும் இடத்தில் 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும். பயணியர் ரயில் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்க முடியும்; இந்த தடத்தில் ஒற்றைப்பாதை இருப்பதால், எதிரே வரும் ரயிலுக்காக பல மணி நேரம் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பாதை பயன்பாட்டிற்கு வந்த பிறகு நேரம் மிச்சமாகும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரம் செங்க்ல பட்டு தடம் செங்க்ல பட்டைய்ய தொடாமல் ஒரு குறுக்கு வழி இனைப்பைய்ய ஏஆர் படுத்தினால் டாம்பரத்தத்திலிருந்து திருப்பதி ரேணுகுண்டா வலி மற்றும் சேலம் வழி ரயில்கள் இயக்க டியும்.
இது போலத்தான் விருதுநகர் செங்கோட்டை பாதையில் பல இடங்கலில் ரயில் தாமதம் ஏற்படுகிறது. பொதிகை, சிலம்பு, தாம்பரம் எக்ஸ்பிரஸ் சுமார் 15 முதல் 40 நிமிடம் வரை தாமதமாக சேல்கிறது. பல வருடங்களாக இந்த நிலைமைதான். கூடிய விரைவில் விருதுநகர் செங்கோட்டை திருநெல்வேலி இரட்டை பாதை ஆரம்பிக்க வேண்டும். மேலும் இரட்டைபாதை மூலமாக பல ரயில்சேவைகள் kidaikkam.மேலும்
-
'காக்ரோச் ஜனதா கட்சி' சமூக வலைதள இயக்கம்; அன்னிய தலையீடு குறித்து உளவுத்துறை விசாரணை
-
விளம்பர விருப்பம் தளபதி மகளிர் கல்லுாரியில் 2வது பட்டமளிப்பு விழா
-
தனியார் மருத்துவமனை அருகே சேதமடைந்த மழைநீர் கால்வாய்
-
மேம்பால பணி படுமந்தம் விரைந்து முடிக்க கோரிக்கை
-
தினமலர் செய்தி எதிரொலியாக பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை
-
கிண்டலில் துவங்கி ரத்த வெள்ளத்தில் முடிந்த அண்டை வீட்டு தகராறு