நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
புதுடில்லி: நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்தது. குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டது.
கடந்த 2013ல் சென்னையில் சொத்து தகராறில், நரம்பியல் டாக்டரான சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னுசாமி, பேசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு துாக்கு தண்டனையும்; மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுவித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்தது.
குற்றவாளிகளை விடுதலை செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்தது. குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டது.
வீடியோ பார்க்க….
டாக்டர் சுப்பையா வழக்கு: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து பிரத்யேக வீடியோ
சிறப்பு வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதுக்கு நேரா சுரிம் கோர்ட்டுக்கே போயிருக்கலாம். இவிங்க எழுதறதை அவிங்க மாத்தி எழுதுனா நல்லாவா இருக்கு? ஒவ்வொருத்தரும் வேற வேற நியாய சம்ஹிதை படிச்சிருப்பாங்களோ?மேலும்
-
எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
-
செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றும் உத்தரவு; திரும்ப பெற சுப்ரீம் கோர்ட் மறுப்பு
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு