திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் மரண குழியால் அபாயம்

திருச்சுழி: திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பாலம் பெயர்ந்து குழிகள் போல் உள்ளதால் அவசரத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

திருச்சுழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றிப் பகுதியில் உள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற வருவர். அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக உள்ளதுமருத்துவமனைக்குள் நுழைவு பகுதியின் அருகில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலத்தின் மேற்பகுதி சேலம் அடைந்து, உடைந்து 2 குழிகளாக உள்ளன. அவசர சிகிச்சைக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் வரும் நோயாளிகள் பாலத்த அருகே வரும்போது தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் பாலத்தை சிரமப்பட்டு தான் கடக்க வேண்டி உள்ளது. இங்கு சிகிச்சை பெற வரும் மக்கள் இரவு நேரத்தில் குழிக்குள் விழுந்து எழுந்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்த பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

Advertisement