கோடைகால கூடை பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு
பட்டிவீரன்பட்டி, மே 18-
கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளிகள், கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் இணைந்து 6 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கூடை பந்தாட்ட பயிற்சி முகாமை நடத்தின. 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கூடை பந்தாட்ட அடிப்படை பயிற்சிகள், விளையாட்டின் நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன.
பரிசளிப்பு விழாவிற்கு கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் இயக்குனர் மேகலா தேவராஜன் தலைமை வகித்தார். லயோலா கல்லுாரி முன்னாள் உடற்கல்வி இயக்குனர் சத்தியசீலன், இந்து நாடார்கள் உறவின்முறை சங்க செயலர் மோகன்குமார், என்.எஸ்.வி.வி., மெட்ரிக் பள்ளி செயலர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக துணைத்தலைவர் செண்பகராஜன் மாணவர்களுக்கு பரிசு, சீருடை, சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி