குளோபல் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் எம்.பிரித்விராஜன் சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வில் 500 க்கு 498 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். இப்பள்ளி தொடங்கி 10 ஆண்டுகளே ஆன நிலையில் இச்சாதனையை புரிந்துள்ளது. மாணவன் பிரித்விராஜை தாளாளர் காந்தி பாராட்டினார். மாணவனை பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினர்.

Advertisement