திருச்சி கிழக்கில் போட்டியிடும் தவெக வேட்பாளர்; விஜய் பரிசீலனையில் இருவர்...!
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவதற்காக இருவரின் பெயர்களை விஜய் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து, விஜயின் தவெக அரியணை ஏற ஆயத்தமாகி வருகிறது. ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவு குறித்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேவேளையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக செயல்பட அவர் திட்டமிட்டுள்ளார். ஏனெனில், பெரம்பூர் சென்னையில் இருப்பதால், தொகுதி பணிகளை சிரமம் இல்லாமல் நேரில் சென்று கவனிக்க முடியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு வாரங்களுக்குள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், வரும் 18ம் தேதிக்குள் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் இல்லாததால், திருச்சி கிழக்கில் மீண்டும் வெற்றி பெற வேண்டியது தவெகவுக்கு மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிலையில், விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் கு.ப.கிருஷ்ணனை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் அதிமுக அமைச்சரான இவர், தவெகவில் இணைந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.
தற்போது, கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்க விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று பட்டினம்பாக்கம் கட்சி அலுவலகத்தில் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்துமாறு தவெக சார்பில் விஜய்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் உலா வருகிறது.
சகாயத்தை நிறுத்தி வெற்றி பெற்று விட்டால், திமுக ஆட்சியில் முக்கிய பிரச்னையாக இருந்த கனிம வள கொள்ளையைத் தடுக்கத் தனித்துறையை உருவாக்கலாம் என்றும் விஜய்க்கு யோசனைக்கு வழங்கியிருப்பதாக தவெகவினர் தெரிவிக்கின்றனர். திருச்சி கிழக்கில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கிறிஸ்துவர் என்பதால், அதே மதத்தைச் சேர்ந்த சகாயத்தை நிறுத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போ எங்கள் அண்ணியாரை இப்பவே கைகழுவிவிட உத்தேசமா? இது அடுக்காது. தொண்டர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். யாராவது தற்குறிகள் உயிர்த்தியாகம் செய்யக்கூட முயற்சிக்கலாம் . விஜய் சூதானமாக செயல்படவேண்டும்
சகாயத்தின் கிறிஸ்தவ சகாய நடவடிக்கைகள் அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலையை மட்டும் சீரழிக்கவில்லை... ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் புற்றீசல் போல சர்ச்கள் முளைக்க வைக்கப்பட்டன. அந்த ஆள் மதுரை கலெக்டராக பணியாற்றிபோது பிஆர்பி கிரானைட்ஸ் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உண்மையான காரணமே, பிஆர்பி குழுமத்தை அளவுக்கு அதிகமாக வற்புறுத்தி சர்ச் அமைப்புகளுக்கு டொனேஷன் பெற்றதும், அதை அவர்கள் எதிர்த்ததும் தான்.. சகாயத்தை தேர்தலில் இறக்கினால்,அந்த தேர்தலோடு தவெக காலியாகிவிடும்.. சகாயத்துக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் பிரச்சாரம் செய்து அவரது மதமாற்ற அட்டூழிய ஆதரவு செயல்களை பகிரங்க படுத்துவார்கள்.. ஜோசப் விஜய் க்கு இது வேண்டாத வேலை...
யார் நின்றாலும் பறிபோய்விடும் . திமுகவே மீண்டும் வெற்றிபெறும்.
விஜய் அழியப்போவது கிறிஸ்தவ மத வெறியால் மட்டுமே.
ஆரபிச்சிட்டானுக இப்பவே. சகாயம் கிறிஸ்தவர். கேட்டா இவனுக மத அரசியல் பண்ண மாட்டானுகலாம்.
விஜய் என்ற கொடிய அரக்கனின் நிஜ முகம் வெளியே வரும்
கடையே இன்னும் திறக்கலை அதுக்குள்ளே கட்டையை போடுறீங்க. நல்லது செய்யும் எண்ணம்தான் முக்கியம். மதம் முக்கியம் அல்ல.
சகாயம் IAS அதிகாரியாக பணியாற்றியவர், திறமையானவர், நேர்மையானவர், அதனால் நிறுத்தலாமா என்று நினைக்கலாம். எல்லாவற்றுக்கும் மதச்சாயம் பூசினால் என்ன செய்வது. அதற்காக அவரை வேறு மதத்திற்கா மாறச்சொல்லமுடியும்?
விஜயின் தந்தை திரு.எஸ்ஏசி தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு தமிழ் பத்திரிக்கைக்கு அளித்து பேட்டியில் மிகத் தெளிவாக ஒன்றை குறிப்பிட்டது இன்றும் நினைவில் நிற்கிறது இங்கு மதத்தை பரப்புவதை காட்டிலும் மனிதர்களிடையே அன்பை பரப்பினால் ஒட்டுமொத்த சமுதாயமும் மேன்மை அடையும் என அவர் அதில் குறிப்பிட்டது மறக்க கூடியதா என்ன. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ விஜய்க்கு புரிந்து என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டால் மிக்க மகிழ்ச்சி
தமிழ்நாட்டு செகுலர் கொள்கை படி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தேர்ந்து எடுக்கப்படுவார். அவர்கள் கை தமிழ்நாட்டில் ஓங்கும்.
சகாயம் சிறந்த தேர்வாக அமையும் - நல்ல விஷயம் அறிந்தவர். கு ப கிருஷ்ணன் அவர்களுக்கு வேறு பதவி வழங்கலாம் உதாரணமாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் தலைவர் பதவி,
அண்ணியார் வருக இடைத்தேர்தலில் வெல்க.துணை முதல்வர் ஆகுக.ஆமென்.
சகாயத்திடம் பணிபுரிந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். அவருக்கு நேர்மையான அரசுப் பணியைத் தவிர வேறு எந்த அழுத்தத்திற்கோ, மதமாச்சர்யங்களுக்கோ இடம் தராமல் இருந்தவர் என்று.
மிக தவறு. சகாயம் ஒரு conferred IAS தான். தீவிர கிருத்துவ மத அபிமானி.
இவர், உமாசங்கர் போன்றவர்கள் நேர்மை, உண்மை என்று வெட்டி பேச்சு பேசுபவர்கள். இவரை வைத்து விஜய் மத சார்பற்ற அரசை நடத்தப் போகிறாரா ? விஜயின் நிர்வாகத்தில் கிருத்துவர்கள் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்துக்களே உஷார் .மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி