அகற்றப்படாத அபாய மரங்கள்: அசம்பாவிதம் ஏற்பட வாயப்பு

கோத்தகிரி: கோத்தகிரி- ஊட்டி சாலையில் அபாயமரமான மரங்கள் அகற்றப்படாததால் இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி மாவட்டம் உட்பட, மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் இருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட, வெளி மாநிலங்களில் இருந்தும், மலர் கண்காட்சியை, கண்டுக்களிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மைனலை சந்திப்பு பகுதியில், போதிய வேர் பிடிப்பு இல்லாமல், சாய்ந்த நிலையில் காணப்படும் வானுயர்ந்த கற்பூர மரங்கள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளன. காற்றுடன் மழை பெய்யும் பட்சத்தில், இந்த மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மக்கள் நெரிசல் மிகுந்த இப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, அபாய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement