மது பாட்டில்களில் மாலை அணிந்து வந்த சமூக ஆர்வலர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திபூபதி, மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்து சப் – கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு சேத்துமடை – பொள்ளாச்சி ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் பின்பக்கம், மனமகிழ்மன்றம் என்ற பெயரில் எப்.எல்.2 மதுக்கடை செயல்படுகிறது.
இது, அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. இந்த மதுக்கடை அருகே துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலகம், கோவில்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த மதுக்கடையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெரியோர், பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அழுக்குச்சாமியார் கோவில் வீதியில், பெண்கள் கழிப்பிடம் அருகே சில்லிங் மது விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசின் சிறந்த சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சியை, மதுக்கடை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கூவர்கூட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மக்கள் மனு
-
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
-
சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க ஆலோசனை
-
சுருளி அருவியில் பூத நாராயணர் கோயில் திருப்பணிகள் இழுபறி பாலாலயம் முடிந்தும் திருப்பணி துவங்கவில்லை
-
திருத்தணி அரசு கலை கல்லுாரியில் வரும் 29 வரை மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு
-
வடபழனி முருகன் கோவில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்