நாகப்பாம்பை கையில் துாக்கி சென்று சாகசம் செய்தவர் கைது

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பஜாரில், நாகப்பாம்பை கையில் துாக்கி சாகசம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் கடந்த மாதம், 30ம் தேதி, சாலையோரம் படுத்து கிடந்த நாகப்பாம்பை ஒருவர் கையில் துாக்கி சென்று, நடந்த வண்ணம் சாகசம் செய்தார். இது குறித்த ‘வீடியோ’ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதை தொடர்ந்து பாம்பை கையில் எடுத்து சென்ற பிதர்காடு மூச்சுக்குன்னு பகுதியை சேர்ந்த, சாதிக் அலி,46, என்பவர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர் தலைமறைவான நிலையில், குடகு பகுதியில் இருந்து நேற்று முன்தினம், பிதர்காடு வந்த நிலையில், வனச்சரகர் ரவி, வனவர் சுதீர் குமார் ஆகியோர் அவரை கைது செய்தனர். கூடலுார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement