ராமேஸ்வரம் ரயில்வே பிட் லைனில் கழிவுநீர் : நோய் பரவும் அபாயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பிட் லைனில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து பல ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யவும், இயந்திர பாகங்களை சரி செய்யவும் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இரு பிட்லைன் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட ரயில்வே பொறியியல் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
இந்த பிட் லைன் கால்வாயில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற வசதியின்றி, பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் பணிபுரிவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கும் கழிவு நீரை அகற்றி, சுகாதாரம் பராமரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.