ரோடு பணியால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், குப்பாம்பட்டி விலக்கில் இருந்து மணியாரம்பட்டி வரை ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது.

ரோடு புதுப்பிக்கும் பணியில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. ரோடு விரிவாக்கம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியதில் அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. கோத்தலூத்து ஊராட்சி அதிகாரி கண்மாய் அருகே அமைக்கப்பட்ட போர்வெல்லில் இருந்து வரும் குடிநீர் குழாய்கள் சேதமானதால் கோத்தலூத்து கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. கோடையில் குன்னூர் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பாலக்கோம்பை கூட்டுக்குடு திட்டத்தில் போதுமான அளவு நீர் இக்கிராமத்திற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் போர்வெல்லில் இருந்து வரும் குடிநீர் குழாய்களும் சேதமானதால் கிராம மக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர்.

Advertisement