பயன்படுத்தாத ஆடடி மனை

கம்பம்: கம்பம் நகரில் 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை ஆடடி மனைக்கு கொண்டு செல்வதில்லை. ஆனால் ஆடடி மனைக்குரிய கட்டணத்தை இறைச்சி கடையில் சென்று பெற்று கொள்கின்றனர்.

எனவே, இறைச்சி கடைக்காரர்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய இடங்களில் அடுகளை அறுத்து விற்பனை செய்கின்றனர். நோய்வாய்ப்படாத ஆடுகளா, சாப்பிடுவதற்கு உகந்ததா என்பது தெரியாத நிலையில், பொதுமக்கள் வாங்கி பயன்படுத் துகின்றனர்.

பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்டுள்ள நகராட்சியின் ஆடடி மனை பயன்படுத்தப்படாமல் வீணாக உள்ளது.

இதனை நகராட்சியின் துப்புரவு பிரிவு வேடிக்கை பார்த்து வருகிறது.

Advertisement