அடையாளம் தெரியாத  ஆண் சடலம் 

கடலுார்: கடலுாரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

கடலுார், துறைமுகம் தைக்கால் தோணித்துறை முத்தம்மன் கோவில் அருகில் கடந்த 9ம் தேதி, 30 வயது மதிக்கத்தக்க நபர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், இறந்தவர் பற்றி தகவல் தெரிந்தால் 9498100556 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Advertisement