பராசக்தி பள்ளி 31 ஆண்டாக சாதனை

பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி 31 ஆண்டுகளாக தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தாளாளர் ஜெகதீசன், பள்ளித் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், ''இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக உள்ளது. இங்கு பயின்ற பல மாணவர்கள் உயர்கல்வி முடித்து டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்களாக உள்ளனர். கிராமப்புற கல்விச் சேவையே இப்பள்ளியின் குறிக்கோளாக உள்ளது'' என்றனர்.

Advertisement