நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு; முயற்சி வெற்றி பெறணும் என்கிறார் ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: இந்த ஆண்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்து ஆகியிருக்கு. லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்.
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (10)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 மே,2026 - 22:18 Report Abuse
நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது திராவிட மாடல் அரசின் தீய கொள்கை அதை யாருமே பின் பற்றமாட்டார்கள் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விஜய்யிடம் இதை சொல்ல அருகதையே இல்லை.
மாணவர்கள் நன்றாக படித்து தேர்வில் பங்குகொண்டு வாழ்க்கையில் முன்னேறதான் வழிதான் நீட்
தேர்வு படிப்பறிவே இல்லாதவர்கள்தான் நீட் வேண்டாம் என்பார்கள் இதை எங்களது விஜய் முற்றிலும் ஏற்கமாட்டார் அவருக்கு ஸ்டாலின் இதுபோன்ற கெட்ட புத்திமதிகளை கூற வேண்டாம் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
12 மே,2026 - 20:19 Report Abuse
துக்ளக்கார் 2021-26 என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு ???? ஓ, சார்களை வளர்த்து விடுறதுலயே டைம் போயிருச்சு போல .... 0
0
Reply
Balaa - chennai,இந்தியா
12 மே,2026 - 19:25 Report Abuse
அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. தேர்தல்ல தோத்தமா ஊட்டி, கொடைக்கானல்னு டூர் போங்க. இல்ல குடும்பத்தோட கோவில் கோவிலாக பகுத்தறிவு யாகம் பண்ணுங்க. 0
0
Reply
Balaa - chennai,இந்தியா
12 மே,2026 - 19:23 Report Abuse
உங்கள் பிள்ளை உதயநிதி அந்த தங்கமலை ரகசியத்தை எப்பொழுது வெளியிடுவார். முதல் கையெழுத்து என்ன ஆச்சு. திருந்தா ஜென்மங்களா தோற்ற பிறகு இப்பொழுதாவது திருந்துங்கள். 0
0
Reply
Raajan - ,இந்தியா
12 மே,2026 - 18:50 Report Abuse
முதலில் இருந்தா? நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே தான் இந்த விஷயத்தில் தவெகா செய்ய முடியும். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
12 மே,2026 - 17:56 Report Abuse
தமிழ்நாட்டிலே 7500 தனியார் MBBS சீட் உள்ளது. 7500x1 கோடி என்று பார்த்தால் 7500 கோடி வருட வியாபாரம். இந்த தங்க முட்டைய எப்படி விடலாம்? இதிலே பாதி வந்தாலே போதுமே? 0
0
Reply
சி சொர்ணரதி - ,
12 மே,2026 - 16:42 Report Abuse
ஹா ஹா ஹா தீயசக்தி கொள்கை எப்படி த வெ க கொள்கையா?. தீயசக்தி வாக்குறுதியை த வெ க நிறைவேற்றுமா? 0
0
Reply
kalyanasundaram - ottawa,இந்தியா
12 மே,2026 - 16:37 Report Abuse
Daydreams.Impossible task. 0
0
Reply
shyamnats - tirunelveli,இந்தியா
12 மே,2026 - 16:13 Report Abuse
தான் தோற்றாலும் அடுத்தவனை கொம்பு சீவுற வேலைய விடல. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்படும் நீட்டை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்ற முயற்சி. இதுவரை தமிழக மாணவர்கள் நீட்டில் சாதித்துள்ளார்கள் , மருத்துவராகியுள்ளார்கள் என்பதை மக்களிடமே மறைக்க முயற்சிக்கிறார்கள். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
12 மே,2026 - 15:39 Report Abuse
உன்னைத்தான் பந்திக்கே வேண்டாம் என்று டார் டாரா கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுட்டாங்களே, பொறவு எதுக்கு நீட் வெங்காயம் என முச்சந்தியில் நின்று முக்கிக்கிட்டு? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement