புதுச்சேரி விசை படகு உரிமையாளர்கள் அந்தமான் தீவுக்கு களப் பயணம்

புதுச்சேரி: மீன் வளத்துறை அதிகாரி தலைமையில், புதுச்சேரியை சேர்ந்த 27 விசை படகு உரிமையாளர்கள், அந்தமான் தீவுக்கு களப் பயணம் சென்றனர்.

புதுச்சேரி அரசு மீன் வளத்துறை சார்பில், மீனவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்து சென்று, அவர்களுக்கு மீன்வள பயிற்சி, மீன்பிடி தொழில்நுட்பங்கள் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் முதல் களப் பயணமாக அந்தமான் தீவுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை பற்றி தெரிந்து கொள்ளவும், ஏற்றுமதிக்கான யுத்திகளை தெரிந்துகொள்ளவும், அங்குள்ள மீனவர்களிடம் கலந்து உரையாடல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி முதல் வரும் 16ம் தேதி வரை 6 நாட்கள் பயண திட்டமிடப்பட்டுள்ளது. மீன் வளத்துறை துணை இயக்குநர் (இயந்திர பிரிவு ) கோவிந்தசாமி தலைமையில், உதவி ஆய்வாளர் சைமன் லியோ உட்பட புதுச்சேரியை சார்ந்த சுமார் 27 ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளர்கள் அந்தமான் தீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

களப்பயணத்தை மீன வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பயணத்திருக்கான ஏற்பாடுகளை மீன் வளத்துறை இயந்திர பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனனர்.

Advertisement